Friday 26 October 2012

யாராவது ஒருவர்







யாராவது ஒருவர்
குடித்துவிட்டு விழுந்துகிடக்கிறார்கள்.
யாராவது
திறக்காத கடைவாசலில் தூங்குகிறார்கள்.
செருப்புத் தைக்கக் கொடுத்துவிட்டுக்
காத்து நிற்கிறார்கள்.
வெற்றிலைச் சாற்றைப்
 பாதையில் துப்புகிறார்கள்.
யாராவது ஒருவர்
தலைக்கு வைத்த் பூவைத்
தவற விடுகிறார்கள்.
அழுது கலங்குகிற பெண்ணிடம்
ஒதுங்கி நின்று பேசுகிறார்கள்.
சாதுவாக வருகிற கருப்புப் பசுவுக்குத்
தேவைக்கதிகமாகப் பயப்படுகிறார்கள்.
யாராவது ஒருவர்
தொலைபேசியில் சத்தமாகப் பேசுகிறார்கள்.
தேய்த்து அடுக்கிய சலவை உடைகளைச்
சூடாக ஏந்திப் போகிறார்கள்.
என்னைப் போல
யாராவது ஒருவர் -
பள்ளிக்கூடம்   போய்க்கொண்டிருக்கிற
சிறுவர் இருவரில்
சின்னப் பையனின் தலையை வருடுகிறார்கள்.

%

கல்யாண்ஜி கவிதைகள் தொகுப்பிலிருந்து.

3 comments:

  1. என் தலையை வருடுகிற இந்தக்கவிதையைப் பற்றிக்கொள்கிறேன்
    அருமை அண்ணாச்சி

    ReplyDelete
  2. அருமை
    பணம் (மூளை) இன்னமும் உணர்வுகளை (மனதை)
    முழுதுமாக விழுங்கி விட வில்லை
    என்பதை உணர்த்தும் நிகழ்வுகள் இவை என எண்ணுகிறேன்

    ReplyDelete
  3. இது கவிதை அல்ல.. வாழ்க்கை பாடம் ..

    ReplyDelete