நானும்.
எனக்கு வாசிக்கத் தெரியாது.
நானும் வைத்திருக்கிறேன்
ஒரு புல்லாங்குழல்.
%
சுற்றுச் சுவர்களில்.
எதிர்பார்க்கவே இல்லை.
அந்தக் கவிஞரின் புதிய வீட்டுச்
சுற்றுச் சுவர்களில்
எந்தப் பறவைகளும்
பூனைக்குட்டிகளும்
அமர முடியாதபடி
கண்னாடிச் சில்லுகள்
பதிக்கப்பட்டிருக்கும் என.
%
சொல்லப்போகும்...
இரண்டே இரண்டு கிளிகள்
வந்தமர்ந்த மின்கம்பத்தில்
பத்து அமர்ந்து பறந்ததாகச்
சொன்னபோது அவள் கைகளும்
விரிந்து பறந்தன.
பெய்யாத ஆலங்கட்டி மழையைப்
பொறுக்கி வாயில் இட்டதும்
பல் கூசியதாக சினேகிதியிடம் சொல்கையில்
இரண்டு கன்னங்களிலும்
கைகள் பொத்தியிருந்தன.
வீட்டிற்குள் வந்து அவசரமாக,
தண்ணீர் குடித்து ஓடிய நேரம்
அடுத்து அவள் சொல்லப் போகும்
பொய் கொஞ்சம் சிந்தியிருந்தது
மண்பானையின் அருகில்.
%
இன்னொரு கேலிச் சித்திரம்
தொகுப்பில் இருந்து.
கல்யாணி அங்கிள், உங்கள் கவிதையை போல அல்லது உங்களை போல(?!), எனக்கும் வாசிக்க தெரியாது, ஆனால் நானும் வைத்திருக்கிறேன் ஒரு கிடார். :)
ReplyDeleteNice ones. மிகைப் படுத்திச் சொல்வதற்கு பொய்ப் பேசத் தேவைப் படுதல் ஒரு சித்திரமாய் வீற்றிருக்குது இங்கே!
ReplyDeleteஎனக்கு வாசிக்கத்தெரியாது.
ReplyDeleteஇருப்பினும் கையில்வைத்திருக்கிறேன்
கல்யாண்ஜியின் புல்லாங்குழலை
வாசிக்க தெரிந்தும், வாசிக்கப் படாமல்
ReplyDeleteஎன்னிடம் உள்ளன,
ஏராளமாக
புத்தகங்கள்
என்றாவது வாசிப்பேன்
என்ற நம்பிக்கையில்..--