இன்று என்னுடைய அறுபத்து ஏழாவது பிறந்த நாள். இன்னும் நிறைய மனிதர்களை அடைய வேண்டும். நல்ல வண்ணம் மண்ணில் வாழ
வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். கொஞ்சம் எழுதவேண்டும்.
எல்லோர்க்கும் என்னுடைய அன்பும் வணக்கமும் நல் வாழ்த்துகளும்.
நிச்சயம் அது பறவை.
________________________
குனிந்திருந்தேன்
கால பெருவிரல் நகத்தின் வெடிப்புக்குள்.
அது அப்போதுதான் பறந்து சென்றது.
என்ன நிறப் பறவை அது
எனச் சொல்ல முடியாத
சிறகடிப்பின் வேகம்.
நிறமற்ற பறவை என
இப்போது வைத்துக் கொள்வோம்.
நிச்சயம் அது ஒரு பறவை என்பது
போதுமானதாக இருக்கிறது
மீண்டும் நிமிர்ந்து நான்
உங்களைப் பார்க்க.
%
கல்யாண சுந்தரம்
கல்யாணி
T.S
கல்யாணியண்ணன்
நடுவான்
வள்ளி மாப்பிளை
சங்கரியப்பா
கல்யாணித் தாத்தா
மற்றும்
கல்யாண்ஜி
நிகரற்ற நெல்லையாருக்கு
ReplyDeleteநெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள், வணக்கங்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகளும் அன்பு வணக்கங்களும் சார்:)
ReplyDeleteMany Happy Returns of The Day.
ReplyDelete
ReplyDeleteகீரைப் பாத்திகளிடையே
ஒளிந்திருக்கும் சாம்பல் நிற
முயலின் கண்களை
ஒரு மூன்றாம் பிறை இரவில் பார்ப்பது
தட்டாங்கல் ஆட்டத்தில்
தொலைந்த கூழாங்கல்லுக்கு
ஆற்றங்கரையில் இணைக்கல்
தேடும்போது ஒற்றைக் கொலுசு
கிடைப்பது
புத்தகம் நடுவே காய்ந்துபோன
பூவிலிருந்து என்றோ திறக்கும்
போது வரும் சாம்பிராணிக் கல் வாசம்
காடாறு மாதத்திற்கு
முந்தைய இரவை
புணர்ச்சிக்குப் பின் கழிப்பது
காட்சிசாலை பாம்புகளுக்கு
தீனி பகிர்வது
பழக்கிய யானையின்
பின்னங்கால் சங்கிலி
அவிழ்ந்த பின்னும்
அதை ஞாபகத்தால் சுமப்பது
ஒரு சர்க்கஸ் கோமாளியும்
ஒரு நல்மேய்ப்பன் வெட்டியானும்
சூடு மாறாத சாராயத்தை
ஒரு தகனப் பாடலுடன் பருகுவது
ஒரு ரயில் பயணத்தில்
சூல் கொண்ட வயிற்றை
தடவிக் கொடுப்பது
வண்ணதாசனுடன் பேசுவது
(இன்று பேசிய 30 நிமிடங்களுக்கு- 22-08-2012)
-நேசமித்ரன்